டல்லஸ் - மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழகம்

டல்லஸ் வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் மொழியையும், பண்பாட்டையும் கற்றுத்தரும் நோக்கத்துடன் 2014 'இல் 'மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம்' (Metroplex Tamil Academy) குறளரசி. கீதா அருணாசலம் தலைமையில் தொடங்கப்பட்டது . மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் ஒரு அங்கமாக செயல்படும் இக்கல்விக்கழகம் 'கலிபோர்னியா கல்விக் கழக'த்தின்(CTA) பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது (CTA Affiliated School). அடுத்த தலைமுறை தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் முக்கிய குறிக்கோளுடன் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழகம் டல்லாசில் Allen, Murphy, Flowermound, Frisco/Little Elm என நான்கு நகரங்களில் பள்ளிகள் நடத்தி வருகிறது. 200'க்கும் மேலான மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர்.

நமது மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழகத்தின் ஐந்தாவது பள்ளிக்கூடம், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 'இர்விங்' நகரத்தில் வரும் கல்வியாண்டு தொடங்கப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வயதுக்கேற்ற எளிமையான பாடத்திட்டம், கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள் கொண்ட பாட நூல், பயிற்சி நூல், மற்றும் கதை புத்தகங்கள், இவை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழை தொடர்ந்து விருப்பத்துடன் கற்க வழிவகுக்கும் என்பது உறுதி. பள்ளியில் பதிவு செய்ய வேண்டிய விவரங்களை www.catamilacademy.org வலைத்தளத்தில் காணலாம்.

MTA- Allen
Tamil School

Venue : Allen Montessori Academy,
612 Pebblebrook Dr,
Allen, TX 75002

MTA - Murphy
Tamil School

Venue : Fort Montessori Academy,
186 Betsy Lane,
Murphy, TX 75094

MTA - Flowermound
Tamil School

Venue : Wonderland Montessori Academy,
3701 Auburn Dr,
Flower Mound, TX 75022

MTA - Frisco/Little Elm
Tamil School

Venue : Wisdom Montessori Academy,
25679 Smotherman Rd,
Frisco, TX 75033

MTA - Irving
Tamil School (NEW)

Venue : Wonderland Montessori Academy,
431 E Royal Ln,
Irving, TX 75039

Our Sponsors

© 2017 Metroplex Tamil Sangam. A Non-Profit 501(c)(3) Entity. All Rights Reserved.