மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் நடப்பாண்டிற்கான பொதுக்குழுக் கூட்டம் வரும் 2023 ஜனவரி 14 ஆம் தேதி, சனிக்கிழமை காலை நண்பகல் 12 மணி முதல் 1 மணி (12-1.00 PM) வரை நடக்கவிருக்கிறது.மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள், மற்றும் மெட்ரோப்ளெக்ஸ் பகுதி வாழ் தமிழ் உறவுகளை இந்த கூட்டத்தில் பங்கேற்க சங்க செயற்குழு சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
அரங்கில் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில் உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதில் செயற்குழு மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள பேரன்புடன் அழைக்கிறோம்.