தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
சௌந்தர் ஜெயபால் டாலஸ் நகரில் 22 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பெருமைமிகு தமிழர். தமிழ் மொழி, தமிழர் மரபு, கலை, இலக்கியம், பண்பாட்டு விழுமியங்களில் ஆர்வம் கொண்டு பல்வேறு தளங்களில் தொலைநோக்குப் பார்வையோடு திறம்பட தொடர்ந்து பணியாற்றி வருபவர்.
புலம்பெயர் தமிழ்க்குழந்தைகளுக்கான தமிழ்க்கல்வியில் சிறப்புக்கவனம் செலுத்துபவர். அவ்வை தமிழ் மையம், அமெரிக்கத் தமிழாசிரியர் கூட்டமைப்பு, அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகம் ஆகிய அமைப்புகளை உருவாக்கிய நிறுவனர்களில் ஒருவர். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, தமிழ்நாடு அறக்கட்டளை, உத்தமம் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளிலும் பல ஆண்டுகள் தன்னார்வலராக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.
அவ்வை தமிழ்ப்பள்ளிக்கு Accreditation தரச்சான்றிதழ் வாங்கியதிலும், Frisco ISD (ஃப்ரிஸ்கோ ஐ.எஸ்.டி) அங்கீகாரம் பெற்று அனைத்து அவ்வை மாணவர்களுக்கும் இரண்டு High School Credits கிடைக்கச் செய்ததிலும் முக்கியப் பங்காற்றியவர். மேலும், அவ்வை தமிழ்ப்பள்ளி “கல்வி உதவித்தொகை வைப்பு நிதி” திட்டம் உருவாக்கி “நிலை 8” முடிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முக்கிய பங்காற்றிவர். தமது தமிழ்க்கல்வி அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம், பல்வேறு மாகாணங்களில் உள்ள 5க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் Accreditation தரச்சான்றிதழ் பெற உதவியவர். அவ்வை அல்லாத மற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் Avant Assessment மூலம் High School Credits பெற தனிப்பட்ட முறையில் தொடர்ந்து பயிற்சி அளித்து வருபவர். இதன் மூலம் 10க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் 2 முதல் 3 credits வரை பெற்றுள்ளனர். அமெரிக்காவில் தமிழ்க்கல்வி சார்ந்து பல்வேறு தமிழ்ப்பள்ளிகளுக்கு முடிந்தவரை வரை உதவி செய்து வருபவர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்காக தொழில்நுட்ப பயன்பாடுகள் பற்றி பயிற்சியும் தொடர்ந்து அளித்து வருகிறார். இரண்டாம் மொழிக்கல்வி சம்பந்தமான பல்வேறு கருத்தரங்கங்கள், மாநாடுகளில் தொடர்ந்து கலந்து கொள்பவர். இரண்டாம் மொழியாக வெளிநாட்டு மொழியைக் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை அறிந்து கொண்டு அவற்றை தமிழ்ப்பள்ளியின் பாடத்திட்டம், மதிப்பீடுகளில் எப்படி செயல்படுத்தலாம் என்கிற முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருபவர்.
வருடா வருடம் ஜூலை மாதம் வெவ்வேறு ஊர்களில் நடக்கும் பேரவையின் தமிழ்த் திருவிழாவிற்காக இயங்கும் பல்வேறு தன்னார்வ குழுக்களில், அதாவது web, media, marketing, registration, short film, tamilisai, tamil theni, backstage management, event management, parallel sessions arrangement என பல்வேறு குழுக்களில் இணைந்து பேரவைக்கான கட்டமைப்புகளை உருவாக்கியவர். 2009 முதல் 2017 வரை பேரவையின் இணையதளம் வடிவமைப்பு, பராமரிப்பில் முக்கிய பங்காற்றி உள்ளார். முதன்முதலில் பேரவை தமிழ் விழாவிற்காக தனி இணையளம் பதிவுசெய்து இணையதளம் வடிவமைத்தவர். தொழில் முனைவோர் கருத்தரங்கத்திற்கு தனி தளம் வடிவமைத்தவர். முக்கியமாக, மிக மிகக் குறைந்த செலவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு செய்திமடல் அனுப்பும் வகையில் 2014 ஆம் ஆண்டே Amazon Web Service பயன்படுத்தி மென்பொருள் நிறுவியது. 10,000 மின்னஞ்சல்களை அனுப்ப ஒரே ஒரு டாலர் தான் செலவாகும். 2015ஆம் ஆண்டு பேரவை விழா மலருக்கு ஆசிரியராக இருந்துள்ளார். 2014, 2015 ஆம் ஆண்டுகளில், பேரவை விழாவிற்காக விகடன், ஒன் இந்தியா, Behindwoods, News7 TV உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களுடன் பேசி புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்ய வழி வகுத்தவர். முக்கியமாக பறையிசை, தமிழிசை, தமிழ்த்தேனீ, குறும்படம், ஆவணப்படங்கள், தொழில்முனைவோர் கூட்டம், தமிழாசிரியர்கள் சந்திப்பு, தமிழ்க்கணினி, இணையப் பயிலரங்கம் என சில முக்கிய முன்னெடுப்பு நிகழ்ச்சிகளை பேரவையின் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்திய குழுக்களில் இருந்தவர். அத்தகைய நிகழ்ச்சிகள் இன்று விரிவடைந்து அமெரிக்கா எங்கும் உள்ளூர அளவில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தை உருவாக்குவதில் இருந்து அதன் பல்வேறு கட்டமைப்பு செயல்பாடுகளில் 2010 ல் இருந்து 2017 வரை பணி செய்துள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக உள்ளூர் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருபவர். 2009 முதல் 2011 வரை செயற்குழு உறுப்பினராக இருந்து பணி செய்துள்ளார். தமிழ்ச்சங்கத்தில் தொடர்ந்து தேர்தல் நடைபெறுவதன் மூலமும், முறையாக வருமானவரி தாக்கல் செய்வதன் மூலமும் சங்கத்தின் நோக்கமும் மேன்மையும் காக்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வலியுறுத்தி வருபவர். பல ஆண்டுகளாக உள்ளூரில் நடக்கும் எத்தனையோ நிகழ்வுகளில் தன்னார்வலராக எந்தவித சுயநலமும் விளம்பரமும் இன்றி பங்காற்றியிருக்கிறார். எத்தனையோ தமிழ் அறிஞர்கள், கலைஞர்களை அழைத்து வந்து பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த பணி செய்துள்ளார்.
மிகப்பெரிய தமிழ் அமைப்பாக வளர்ந்து நிற்கும் சங்கத்தை வலுவான அமைப்பாக மாற்ற வேண்டிய நேரம் இது. அதற்காக தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல்திட்டங்கள் சில.
இத்தகைய செயற்திட்டங்களை செயலாக்க உங்கள் வாக்கை அளித்து சங்கத்தின் இயக்குநர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி! வணக்கம்.
