Chithirai Thiru (Theru) Vizha 2016

ஏப்ரல் 16 ஆம் தியதி அன்று மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் இயல், இசை, நாடகம் என மாபெரும் விழாவினைச் சிறப்பாக நடத்தியது. முதலில் தமிழப்பள்ளிக்குழந்தைகள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் இரண்டுமுறை தேசிய விருது பெற்ற கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

நெடுங்கால வரலாற்றுக்குச் சொந்தமான நம் தமிழ்மொழிக்கு உலகின் பெருமை வாய்ந்த ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை ( Tamil chair) அமைக்கும் முயற்சி பற்றிய அறிவிப்பை திரு. சுந்தரேசன் சம்மத்தம் , திரு . பால் பாண்டியன் மற்றும் திரு.கால்டுவெல் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து சொல்வேந்தர் சுகிசிவம், சிந்தனைச்செல்வி. திருமதி. சுமதி கஸ்தூரி மற்றும் நகைச்சுவை நாவலர் திரு. மணிகண்டன் ஆகியோரின் சுழல் பேச்சரங்கம் நடைபெற்றது. 38- ஆம் ஆண்டு தன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள தமிழ்ச்சங்கத்திற்கெனத் தனி இடம் வாங்குவது தொடர்பான செய்தியை மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக்குழுவினர் இணைந்து திரு. பால்பாண்டியன் மற்றும் திரு. சீனிவாசன் தலைமையில் செயல்படுவது பற்றித் தலைவர் திரு.கால்டுவெல் அறிவித்தார்.

இறுதியாகப் பார்வையாளர்கள் அனைவரும் மிக ஆவலோடு எதிரபார்த்துக் காத்திருந்த மாபெரும் இசைநிகழ்ச்சி நடந்தது. விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி ரம்யா நிகச்சியைத் தொகுத்து வழங்கச் சின்னக்குயில் சித்ரா, மனோ, விஜய் பிரகாஷ் , நிகில் மேத்யூ , பார்வதி மற்றும் திரு.அருண்குமார் (Drummer) ஆகியோருடன் V#SHARP வசந்தின் இசைக்குழுவினர் இணைந்து பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை வழங்கினர். இந்த விழாவில் Madras Market- குழுவினரும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கமும் இணைந்து குழந்தைகள் விளையாடுவதற்காகவும், பல்பொருள் விற்பனைக்கூடங்களையும், சர்வதேச உணவுக்கடைகளையும் அமைத்திருந்தது சிறப்பு அம்சமாகும். காலை 11 மணிமுதல் இரவு 11 மணிவரை மிகச்சிறந்த முறையில் சிறப்புற நடந்த சித்திரைத்திரு(தெரு)விழாவினை தன்னார்வலர்களுடன் இணைந்து நிர்வாக்க்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்!

© 2017 Metroplex Tamil Sangam. A Non-Profit 501(c)(3) Entity. All Rights Reserved.